Home முக்கியச் செய்திகள் ஓமந்தையில் பூசாரி உட்பட 5 பேர் கைது: வெளியான காரணம்

ஓமந்தையில் பூசாரி உட்பட 5 பேர் கைது: வெளியான காரணம்

0

ஓமந்தை (Omanthai) – விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பூசாரி உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (30)  ஓமந்தை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

வவுனியா (Vavuniya) – ஓமந்தை காவல்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கண்டி (Kandy) பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் 5 பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version