Home உலகம் கனடாவில் யுவதியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சிறுவர்கள்: காவல்துறையினர் வலைவீச்சு

கனடாவில் யுவதியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சிறுவர்கள்: காவல்துறையினர் வலைவீச்சு

0

கனடாவில் 5 சிறுவர்கள் யுவதியொருவரை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம், நோர்வூட் அவென்யூ மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யுவதியை வேறு ஒர் இடத்திற்கு அழைத்து சென்று தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 தேடும் நடவடிக்கை

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/5-teenagers-accused-sexually-abusing-girl-canada-1728489048

NO COMMENTS

Exit mobile version