Home உலகம் ஆசியாவிலேயே ஐந்து வயதில் சாதனை படைத்த சிறுவன்

ஆசியாவிலேயே ஐந்து வயதில் சாதனை படைத்த சிறுவன்

0

ஆசியாவிலேயே குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ (Mount Kilimanjaro) சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபைச் (Punjab)  சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்த டெக்பீர் சிங், 23ஆம் திகதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்துள்ளார்.

சுவாச பயிற்சிகள் 

மகனின் இந்த சாதனை குறித்து கருத்து வெளியிட்ட அவரது தந்தை, “டெக்பீர் சிங் இதற்காகக் கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே ஐந்து வயதில் சாதனை படைத்த சிறுவன் | 5 Year Old Boy Climbing Mount Kilimanjaro Record

தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம் ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version