Home இலங்கை குற்றம் யாழ்ப்பாணத்தில் ஐந்து இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஐந்து இளைஞர்கள் கைது

0

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(1) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது,
குருநகர் , மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள்
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்
,அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version