Home இலங்கை சமூகம் முள்ளிவாய்க்காலில் 50 வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

முள்ளிவாய்க்காலில் 50 வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட
முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்கான 50 வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான
அடிக்கல்லினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் நாட்டி வைத்துள்ளார்.

அவுஸ்ரேலிய தமிழ் யூனியனின் நிதி பங்களிப்புடன் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் தலா இருபது இலட்சம் பெறுமதியான 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

இதில், அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் தலைவர் ந.ரட்னராஜா
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்

பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்
நிர்வாகம் சி.குணபாலன் மேலதிக மாவட்ட செயலாளர் காணி சி.ஜெயகாந் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் வீட்டுத்திட்டத்தின் தொடக்க நிகழ்வான
அடிக்கல்லினையும் நாட்டி வைத்துள்ளார்கள்.

இந்த வீட்டுத்திட்டத்தினை அவுஸ்ரேலியாவினை தளமாக கொண்டியங்கும் அவுஸ்ரேலிய
தமிழ்யூனியன் நிதி உதவிகளை வழங்கிவைப்பதுடன் முள்ளிவாய்க்கால் கப்பலடி
வீதியில் கரைதுறைப்பற்று பிரதே செயலாளரினால் சுமார் எட்டு ஏக்கர் காணி
வழங்கப்பட்டுள்ளது

அத்துடன் வீடு காணிகள் அற்ற 50 பயணாளிகள் தெரிவும் பிரதேச
செயலாளர் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டு சுமார் 20 இலட்சம் பெறுமதியான 50
வீடுகளும் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version