Home இலங்கை சமூகம் ரஷ்ய இராணுவத்தில் சிக்கி தவிக்கு இலங்கை இளைஞர்கள் : நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் அரசு

ரஷ்ய இராணுவத்தில் சிக்கி தவிக்கு இலங்கை இளைஞர்கள் : நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் அரசு

0

இலங்கையில் இதுவரையில் 500 இளைஞர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்ய எல்லைகளுக்கு தொழில் வாய்ப்புக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு இராணுவத்தில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், அங்கு சிக்கியுள்ள சில இளைஞர்களின் தாய்மார்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பார்ட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் வழங்கப்பட்டு தற்போது ஒரு மாத காலம் ஆகிவிட்டது.

இருப்பினும், தற்போது வரையில் இது தொடர்பில் எவ்விதமான பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை மற்றும் எவ்வித நடவடிக்கையும் வெளிவிகார அமைச்சர் எடுக்கவும் இல்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெளிவிகார அமைச்சர் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/SbWZV1mxc5o?start=475

NO COMMENTS

Exit mobile version