Home இலங்கை சமூகம் நாட்டில் களமிறக்கப்படவுள்ள நூற்றுக்கணக்கான சிறப்பு அதிரடிப்படையினர்

நாட்டில் களமிறக்கப்படவுள்ள நூற்றுக்கணக்கான சிறப்பு அதிரடிப்படையினர்

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Public Security – Sri Lanka) தெரிவித்துள்ளது.

இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு 

அத்தோடு, தென் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த நான்கு காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பலாங்கொடை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை சமாளிக்க இரண்டு சிறப்பு காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version