Home இலங்கை சமூகம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

0

கொழும்பு(colombo) தேசிய வைத்தியசாலையில் ஐயாயிரம் இதய நோயாளிகள் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நானூறு (400) நோயாளிகள் ஒரு வருடம் மற்றும் பதினொரு மாதங்களுக்குள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர்.

மேலும், இரண்டு முதல் மூன்று வருட காலத்திற்கு எழுநூற்று ஐம்பத்தாறு (756) நோயாளிகளும், மூன்று வருட காலத்திற்கு அறுநூறு (600) நோயாளிகளும், இரண்டாயிரத்து நானூறு (2400) நோயாளிகள் நான்கு வருட காலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சில நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு

இந்த நோயாளர்கள் முறையான முறையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் போது சில நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மருத்துவ காப்புறுதி முறை

அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட விசேட சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவில் தனியார் துறையினரால் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு அடிக்கடி நிர்ப்பந்திக்கப்படும் நோயாளிகளுக்கு திறைசேரி உதவி வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இல்லையேல் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகலாம் என நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version