Home இலங்கை பொருளாதாரம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50000 ரூபா உதவித்தொகை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50000 ரூபா உதவித்தொகை

0

வீடுகளை இழந்துள்ள, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர்,

“முன்னதாக 10000 ரூபா வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட வெள்ள உதவி தொகை 25000 ரூபாவாக அதிகரித்துள்ளோம்.

அது தொடர்பில் இன்று சுற்றறிக்கை வெளிப்படுத்தப்படும்.

ஒரு சிலர் முகாம்களில் உள்ளனர். அவர்கள் அங்கு இருப்பதை விரும்பாவிட்டால் 6 மாதங்களுக்கு இந்த உதவித்தொகையை பெற்று வாடகை அடிப்படையில் விரும்பிய வீட்டுக்கு செல்லாம்.

ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது 3 பேர் இருந்தால் 25000 ரூபாவாகவும் அதை விட அதிகமாக இருந்தால் அதனை ஆராய்ந்து 50000ரூபா வரை அதை அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

https://www.youtube.com/embed/LFOKnAmrXd8

NO COMMENTS

Exit mobile version