ஐம்பத்தாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவியாக 130 மில்லியன் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத விண்ணப்பம்
இந்த பணம் 2005 – 2024 காலகட்டத்தில் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிதி உதவியை பெற முறையான விண்ணப்பம், மாதாந்த வருமான அறிக்கை, நிதி சொத்துக்கள் குறித்த பிரதேச செயலாளரின் அறிக்கை, மருத்துவ உதவி அறிக்கை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
