Home முக்கியச் செய்திகள் அடையாளம் காணப்பட்ட 1,400 சந்தேகநபர்கள்: சிறிலங்கா காவல்துறை அதிரடி!

அடையாளம் காணப்பட்ட 1,400 சந்தேகநபர்கள்: சிறிலங்கா காவல்துறை அதிரடி!

0

நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களும், அவற்றை பின்தொடர்பவர்களில் 1,400 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மொத்த குற்றச்செயல்கள்

அத்தோடு, இந்த ஆண்டு (2025) மாத்திரம் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பதில் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவங்களில், காவல்துறை மற்றும் முப்படைகளின் ஆயுதப் படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

மேலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், போர் துப்பாக்கிகள் 75 , 07 ரிப்பீட்டர்கள், 805 ஷாட்கன்கள் மற்றும் 04 பிற துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.

You may like this

https://www.youtube.com/embed/g6CYlOg_Z4w

NO COMMENTS

Exit mobile version