Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் 6 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

கிளிநொச்சியில் 6 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

0

கிளிநொச்சி – பளை கச்சார்வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6
இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.

வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், 5ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா இன்று(17.07.2024) நடைபெற்றுள்ளது.

ஏலம் விடப்பட்ட மாம்பழம்

மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும் விநாயகப்பெருமானின் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில்
விடப்பட்டுள்ளது.

இதன்போது, பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்றுள்ள நிலையில் கச்சார்வெளியினைசேர்ந்த
அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் அதனை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளார்கள்.

NO COMMENTS

Exit mobile version