Home இலங்கை குற்றம் எம்பிலிப்பிட்டியவில் ஆறு உள்ளூர் அதிகாரிகள் கைது!

எம்பிலிப்பிட்டியவில் ஆறு உள்ளூர் அதிகாரிகள் கைது!

0

எம்பிலிப்பிட்டியவில் இயங்கும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த ஆறு பேரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடுகள்

2016 மற்றும் 2018 க்கு இடையில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையால் 77
திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

எனினும், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் 15 திட்டங்கள் இதுவரை
ஆரம்பிக்கப்படவில்லை என்பதை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட் சந்தேக நபர்கள், இன்று
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/6-local-officials-arrested-in-mpilipitiya-1751592946

NO COMMENTS

Exit mobile version