Home இலங்கை சமூகம் ரணிலுக்கு ஆதரவு: சைக்கிள் பேரணி மேற்கொள்ள தயாராக இருந்த ஆறு பேர் கைது

ரணிலுக்கு ஆதரவு: சைக்கிள் பேரணி மேற்கொள்ள தயாராக இருந்த ஆறு பேர் கைது

0

முல்லைத்தீவு (Mullaitivu) –  புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த 06 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைகது நடவடிக்கையானது நேற்று (08.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe )ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்ல தயாராக இருந்ததாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணை

அதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்ட போது அதிலிருந்து தேர்தல் பதாதைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்த , சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் புதுக்குடியிருப்பு காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version