ஆப்கானிஸ்தானின் கசாரா மாவட்டத்திலுள்ள ஷியா பள்ளிவாசலொன்றில் மர்ம நபர்,நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாக தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பள்ளிவாசலின் இமாம் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: கைப்பற்றப்பட்ட பாகிஸ்தானிய கப்பல்
விசாரணை
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்த தாக்குதலை முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து! ஐவர் பலி
அடிக்கடி தாக்குதல்
ஐ.எஸ். அமைப்பின் துணை அமைப்பு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கு முக்கிய போட்டியாகவுள்ளது.
இந்நிலையில்,பாடசாலைகள், வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் ஷியா மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கிலான மக்கள் வெளியேற்றம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |