Home இலங்கை சமூகம் ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

0

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்புமனு கையளிக்கும் தினத்தன்று, கடமை நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க சென்ற டிப்போ முகாமையாளர் உட்பட 6 பேர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை களுத்துறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஹொரணை டிப்போ முகாமையாளர், உதவி முகாமையாளர் (கட்டுப்பாடு) மற்றும் நான்கு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

முறைப்பாடு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக NB 6182 என்ற ஹொரண டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தில் இவர்கள் 6 பேரும் பொரளை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அரச பேருந்தில் பொரளைக்கு பயணித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version