Home இலங்கை சமூகம் மட்டு. வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்

மட்டு. வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்

0

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த
குரங்குகூட்டம் பெண்களை கடித்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை
ஒடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், மக்கள் வீட்டை விட்டு
வெளியே செல்லமுடியாது. பயபீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வந்தாறுமூலை பேக் வீதியில் நேற்று வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண்
ஒருவர் மீது குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

இவரின் காலில்
பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.

பல சேதங்கள் 

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 6 பேர் குரங்கு கடிக்கு உள்ளாகி
படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்த போதும் கந்த சில
வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை
உடைத்து சேதமாகி வருகின்றது. 

மேலும், மாமரம், பலாமரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள்
காய்களை பிடுங்கி அழித்து வருகின்றது. அவ்வாறே அந்த பகுதியில் பயிரட்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம்
செய்து வருகின்றன. 

அத்துடன், வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து
அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் படுகாயமடைந்துள்ளதை அடுத்து
மக்கள் பயபீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள்
முடங்கியதுடன் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version