Home இலங்கை சமூகம் யாழில் துயரம் – 6 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி

யாழில் துயரம் – 6 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி

0

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது இருந்து விளையாடிய போது வலை அறுந்து சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

உயிரிழந்த சிறுமியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, நேற்று (17.06.2025) மாலை யாழ்ப்பாணம் – புங்கன்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version