திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை அழைப்பு
இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே இலங்கை பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.