Home இலங்கை சமூகம் கண்டியில் வீசியெறியப்பட்ட 600 தொன் குப்பைகள்.. சிரமத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

கண்டியில் வீசியெறியப்பட்ட 600 தொன் குப்பைகள்.. சிரமத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

0

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற புனித தந்த தாது தரிசனத்துக்காக வருகை தந்த யாத்திரிகர்கள், சுமார் 600 தொன் குப்பைகளை கண்டி நகருக்குள் வீசியெறிந்துள்ளனர்.

கண்டி மாநகர சபையின் திடப்பொருள் மேலாண்மைப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது

கடந்த 18ம் திகதி தொடக்கம் நேற்று மாலை வரை நடைபெற்ற புனித தந்த தாது தரிசனத்திற்காக சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கண்டிக்கு வருகை தந்திருந்தனர்.

சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

இவர்கள் சுமார் 600 தொன் எடையளவான பொலித்தீன் உறைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை கண்டி நகருக்குள் வீசியெறிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவற்றில் சிறுநீர், மலம் நிரம்பிய பொலித்தீன் உறைகளும் காணப்படுவதாகவும், அவற்றை அப்புறப்படுத்துவதில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version