Home உலகம் மக்கள் இனிப்பு சாப்பிடுவதை தடுக்க வெளிநாடு ஒன்று எடுத்த அதிரடி முடிவு

மக்கள் இனிப்பு சாப்பிடுவதை தடுக்க வெளிநாடு ஒன்று எடுத்த அதிரடி முடிவு

0

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து (Switzerland) அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மக்களுடைய உடல் நலனைக் கருதி, அதிகம் இனிப்பு சாப்பிடுவதைக் குறைப்பதற்காக, இனிப்பு பானங்கள் மற்றும் உணவுகள் மீது வரி விதிக்கலாம் என சுவிட்ஸர்லாந்து மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பு ஒன்று யோசனையை முன்வைத்துள்ளது.

அத்துடன், மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரியையும் அதிகரிக்க இந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

வரி விதிப்பு யோசனை

இந்த பொருட்கள் மீது வரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும். ஆகவே, அவற்றை வாங்குவது மக்களுக்கு கடினமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் மக்கள் உடல் நலனுக்கு நன்மை ஏற்படும் என்பதாலேயே அவற்றின் மீது வரி விதிக்க அந்த சுவிட்ஸர்லாந்து அமைப்பு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version