Home இலங்கை சமூகம் நெல் கொள்வனவுக்கு மானிய வட்டி: ரணிலின் யோசனைக்கு கிடைத்த அங்கீகாரம்

நெல் கொள்வனவுக்கு மானிய வட்டி: ரணிலின் யோசனைக்கு கிடைத்த அங்கீகாரம்

0

நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மில்லியன் ரூபா சலுகை வட்டி 

2024 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்கான கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற திறைசேரி பிரதிச் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் படி சிறுபோகத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.

இதன்படி வங்கிகள் மூலம் 6,000 மில்லியன் ரூபா சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version