Home இலங்கை சமூகம் இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இலங்கை இளைஞர்கள் : மாற்றியமைக்கப்பட்ட பாரம்பரியம்

இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இலங்கை இளைஞர்கள் : மாற்றியமைக்கப்பட்ட பாரம்பரியம்

0

அண்மைக்காலமாக இஸ்ரேலுக்கு(israel) தொழிலுக்காக செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்(foreign employment bureau) தெரிவித்துள்ளது.

இதன்படி இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள்

மேலும், ஜனவரி 2025 முதல், 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக சென்றுள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றவுள்ள 41 வேலை தேடுபவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (10) பணியகத் தலைவர் கோசல விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் குழு நேற்று இஸ்ரேலுக்குப் புறப்பட்டது.

மேலும் 177 பேர் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக செல்ல தயாராகி வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டது.

பாரம்பரியம் மாற்றியமைப்பு

ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு தொழிலாளர்கள் இடம்பெயரும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் காணப்படுவதாகவும்,அந்த பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து வெளியேறி இஸ்ரேலில் வேலை தேடுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version