Home இலங்கை சமூகம் இந்த ஆண்டு எயிட்ஸ் தொடர்பில் பதிவான அதிர்ச்சித் தகவல்

இந்த ஆண்டு எயிட்ஸ் தொடர்பில் பதிவான அதிர்ச்சித் தகவல்

0

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் 600 க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி-எயிட்ஸ் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எயிட்ஸ் தொற்றால் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றாளர்களின் எண்ணிக்கை

தேசிய பாலியல் நோய்-எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கணிப்பீட்டின் படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை நாட்டில் 639 எச்.ஐ.வி-எயிட்ஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6 வீதம் அதிகரிப்பாகும்.
2024 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில் 605 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் 68 ஆண்கள் மற்றும் மூன்று பேர் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களாவர்.

மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
2025 ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றாளர்களில் ஆண்-பெண் விகிதம் 6:1 ஆகும்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி-எயிட்ஸ் தொற்றாளர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன.

NO COMMENTS

Exit mobile version