Home இலங்கை சமூகம் நாட்டில் விபத்துகளினால் நாளாந்தம் 7- 8 பேர் பலி

நாட்டில் விபத்துகளினால் நாளாந்தம் 7- 8 பேர் பலி

0

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தவகையில், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1870 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 1,757 வீதி விபத்துகள் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து விதி

அத்துடன், வீதி விபத்துகளினால் நாளாந்தம் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கான காரணம்

இதேவேளை, 15 பேரை பலியெடுத்து 17 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கிய எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்துக்கான காரணம் வெளியாகி உள்ளது.

இதன்படி 25 வயதுடைய பேருந்து சாரதியின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி கா வல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version