Home இலங்கை குற்றம் ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த நிதிநிறுவன அதிகாரி கைது

ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த நிதிநிறுவன அதிகாரி கைது

0

சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த நிதிநிறுவன அதிகாரியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபே பிரதேசத்தில் உள்ள தனியார் நிநிதிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மூத்த நிதி அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க நகைகள் மோசடி 

அவர் பணியாற்றிய நிறுவனத்தில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி குறித்த அதிகாரி, வேறு நிறுவனங்களில் அடகு வைத்து அந்தப் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறாக குறித்த நபர் 66,504,722.57 ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version