Home இலங்கை குற்றம் ரணிலின் மக்கள் தொடர்பு பணிப்பாளரிடம் ஏழு மணி நேர விசாரணை

ரணிலின் மக்கள் தொடர்பு பணிப்பாளரிடம் ஏழு மணி நேர விசாரணை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் நேற்று (15)  சுமார் ஏழு மணி நேரம்
விசாரணை நடாத்தியுள்ளனர்.

நடப்பு ஜனாதிபதி குறித்து அவதூறான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டமை
தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு ஒன்று இது தொடர்பான முறைப்பாட்டை
செய்திருந்தது.

தவறான அறிக்கைகள்

ஜனாதிபதி குறித்து அவதூறான மற்றும் தவறான அறிக்கைகள் வெளியிடப்பட்டதன் மூலம்,
அவரது நற்பெயருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் குறிப்பிடத்தக்க
பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக குறித்த முறைப்பாட்டில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version