Home இலங்கை சமூகம் 15 வயது சிறுமியை தகாத முறைக்குட்படுத்திய ஏழு மாணவர்கள் கைது

15 வயது சிறுமியை தகாத முறைக்குட்படுத்திய ஏழு மாணவர்கள் கைது

0

பாடசாலை மாணவியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பகுதியில் வைத்து 15 வயதுடை மாணவியொருவரே இவ்வாறு தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஹோமாகம பகுதியைச் சேர்ந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் தெரிவித்த  தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் காதலன் அவரை ஹோமாகம பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு குறித்த சிறுமி தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடளித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

இதையடுத்து, பாதிக்கப்ட்ட சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமி காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அங்கு பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையாக தகாமுறைக்கு மாணவி உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாடசாலை மாணவர்கள்

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் எனவும் மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களும் இன்று (04) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/j7qHwXKA72U

NO COMMENTS

Exit mobile version