Home முக்கியச் செய்திகள் இஸ்ரேலின் கோர தாக்குதலில் கை,கால்களை இழந்த சிறுவன் : டுபாய் இளவரசரை நெகிழ வைத்த காணொளி

இஸ்ரேலின் கோர தாக்குதலில் கை,கால்களை இழந்த சிறுவன் : டுபாய் இளவரசரை நெகிழ வைத்த காணொளி

0

கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல்(israel) தொடர் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.

இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளும் என ஐநா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.

இந்த ஏழு வயதான சிறுவன் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான்.

சமூக ஊடகங்களில் வைரலான சிறுவனின் கதை

சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காணொளி சமூக ஊடகங்களில் பரவின.

செயற்கை உறுப்புக்கள்

இது துபாய்(dubai) நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீன சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version