Home இலங்கை அரசியல் அடுத்த மாதம் முதல் 7000 ரூபா கொடுப்பனவு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் 7000 ரூபா கொடுப்பனவு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0

காவல்துறை அதிகாரிகளுக்கு 7000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்கப்படும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda wijepala) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீருடை மற்றும் பாதணி

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“காவல்துறை அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது.

அதன்படி, ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும் ரூபா 7,000/- கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 2025 ஆம் ஆண்டிற்காக 1,100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதமே அந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

அத்துடன், அதிகாரிகளின் விளையாட்டுப் பாதணிகள் மற்றும் உடைகளுக்காகவும் கொடுப்பனவு ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த வாரமே அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

You may like this

https://www.youtube.com/embed/giyHYb1251c

NO COMMENTS

Exit mobile version