Home இலங்கை 71,000ஐக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – மரணங்கள் 49 ஆக அதிகரிப்பு

71,000ஐக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – மரணங்கள் 49 ஆக அதிகரிப்பு

0
image

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று (14) வரையான தரவுகளின்படி,

நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 71,235 ஆக பதிவாகியுள்ளதுடன், 49 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அப்போது மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/the-number-of-dengue-patients-has-crossed-71000—deaths-increase-to-49-1784116033

NO COMMENTS

Exit mobile version