கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகளால் குறைந்தது 74 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 391 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களை அவசரகாலக் குழுக்கள் மீட்டெடுத்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் கூறியது.
ஐம்பதாயிரத்தை கடந்தது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஒக்டோபர் 2023 முதல் காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் மொத்த எண்ணிக்கை 56,156 ஆக உயர்த்தியுள்ளன, மேலும் 132,239 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை திங்கட்கிழமை அதிகாலைவேளை முதல் காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் 10 பேர் மனிதாபிமான உதவிக்காகக் காத்திருந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
