Home இலங்கை சமூகம் புதிய கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

புதிய கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

0

அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொடுப்பனவு 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அனுமதி

இந்த யோசனையை புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் முன்வைத்துள்ளார்.

இதற்கமைய பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வருடாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு, ஊக்குவிப்பு கொடுப்பனவாக 5000 ரூபாவும், சீருடை கொடுப்பனவாக 2500 ரூபாவும் சேர்த்து வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version