Home இலங்கை அரசியல் தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதி

0

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகின்றோம்.

புதிய பாதை

இலங்கையின் வரலாற்றை தற்போது மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் பிரவேசித்துள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் தற்போது ஒன்றாகப் போராடுகின்றோம்.

எமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/3ts5TF3KFjA

NO COMMENTS

Exit mobile version