Home இலங்கை சமூகம் உதவி திட்டங்கள் கிடைக்கவில்லை! போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி மக்கள்

உதவி திட்டங்கள் கிடைக்கவில்லை! போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி மக்கள்

0

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி யோகர்சுவாமி குடியிருப்பு பகுதியில்
உள்ள 78 குடும்பங்கள் கடந்த வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட போதும் தமக்கான
உதவித் திட்டங்கள் எவையும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான தாழ் நிலப் பகுதிகளில் ஒன்றான
பன்னங்கண்டி பகுதியில் உள்ள யோகர்சுவாமி குடியிருப்பு வெள்ளத்தினால்
கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வெள்ளநீர் புகுந்து பல வீடுகளில் பாதிப்பு
ஏற்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டம்

இருப்பினும்

தமக்கான உதவித்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக் கிராமத்தில் சுமார் 78 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் பல குடும்பங்களின் வீடுகளுக்குள் முழுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வீடு
சுத்தம் செய்வதற்கான 25000 மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வழங்கப்படுகின்ற
உதவித் தொகையும் கிடைக்கவில்லை என தெரிவித்து போராட்டத்தில்
ஈடுபட்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version