Home முக்கியச் செய்திகள் எச்சரித்த திக் திக் நிமிடங்கள் : F-35 போர் விமானங்களை வீழ்த்தியது ஈரான்

எச்சரித்த திக் திக் நிமிடங்கள் : F-35 போர் விமானங்களை வீழ்த்தியது ஈரான்

0

புதிய இணைப்பு 

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல், அமெரிக்க தயாரிப்பான F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை பயன்படுத்தியதாகவும், அதை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கான ஈரான் தூதரகமும் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறது. இஸ்ரேல் இதனை மறுத்திருக்கிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையெனில், F-35 விமானங்களை வீழ்த்திய முதல் நாடு ஈரானாகத்தான் இருக்கும்.

“ஈரானின் வான் பாதுகாப்புப் படைகள் இரண்டு இஸ்ரேலிய F-35 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளன. மேலும் பல ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துள்ளன.

ஒரு பெண் விமானி கைது செய்யப்பட்டிருக்கிறார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன” என்று இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

முதலாம் இணைப்பு

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது.

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்ததுடன் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.

காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

இந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை. 

ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 

ஈரானின் எதிர் தாக்குதல்

இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புச் செயல்களை நடத்தி வருகிறது.” ன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் பதற்றத்திற்கு பிறகு ஐ.நா. தலைவர் அன்டோனியோ குத்ரேஸ் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

“ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் எதிர் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. அமைதியும், ராஜதந்திரமும் மேலோங்க வேண்டும்” என தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version