Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு சிறுவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

மட்டக்களப்பு சிறுவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

0

மட்டக்களப்பில் 78 வீதமான சிறுவர்கள் பெற்றோர் இருந்தும் கல்வி நோக்கத்திற்காக சிறுவர் இல்லங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் றிவானி றிபாஸ்
தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன்
தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கருத்து தெரிவித்த றிவானி றிபாஸ், “கிழக்கு மாகாணத்தில் உள்ள 51 சிறுவர் இல்லங்களில்1,204 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு
வருகின்றனர். 

சரியான நடத்தைகள் 

நீதிமன்றத்தால் வழங்கப்படும் சிறுவர்களை பாதுகாத்து பராமரித்து
சரியான நடத்தைகளை கண்காணித்து நற்பிரைஜகளாக சமூகத்தில் இணைப்பதற்கு சிறுவர்
நன்னடத்தை அதிகாரசபை சேவையாற்றிக் கொண்டிருக்கின்றது.

தாய் தந்தைகளை இழந்த மற்றும் கைவிடப்பட்ட சிறுவர்களை பராமரிப்பது பிரதான
நோக்கம். இருந்தபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான சிறுவர்கள் கல்வி
நோக்கத்துக்காக பெற்றோரின் அன்பில் இருந்து பிள்ளைகளை பிரித்து சிறு இல்லங்களில் இணைக்கப்படும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக 5ஆம் ஆண்டு அல்லது 9ஆம் ஆண்டு பிள்ளைகளுக்கு கல்வி வழங்க முடியாது
மற்றும் போக்குவரத்து போன்ற பிரச்சினைகள் காரணமாக சிறுவர் இல்லங்களில்
இணைப்பதற்கு அனுமதிகோரியுள்ளனர். 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிள்ளைகளை
நிறுவனத்தில் இணைப்பது இறுதியான தீர்வாக காணப்பட வேண்டுமே தவிர முதல் தெரிவாக
இருக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version