Home சினிமா 7ம் அறிவு படத்தின் வில்லன் டாங்லியை நியாபகம் இருக்கா? முகம் எல்லாம் ஒட்டிப்போய் அடையாளமே தெரியலையே…

7ம் அறிவு படத்தின் வில்லன் டாங்லியை நியாபகம் இருக்கா? முகம் எல்லாம் ஒட்டிப்போய் அடையாளமே தெரியலையே…

0

7ம் அறிவு

தமிழ் சினிமாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதிஹாசன் முதன்முறையாக ஜோடியாக நடித்த திரைப்படம் 7ம் அறிவு.

சூர்யா, அரவிந்த் என்ற கதாபாத்திரத்திலும், போதி தர்மராகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில் வில்லனாக டாங்லி கதாபாத்திரத்தில் ஜானி ட்ரை நுயன் என்பவர் நடித்தார்.

நோக்கு வர்மத்தின் மூலம் படத்தில் நடித்தவர்களை தாண்டி ரசிகர்களையும் பார்வையாலேயே கவர்ந்தார்.

லேட்டஸ்ட்

ஜானி ட்ரை நுயன் 2002ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான We Were Soldiers படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் ஸ்பைடர் மேன் 2 படத்திலும் நடித்தவர் இந்தியா பக்கம் 2007ம் ஆண்டு ராம் சரணின் சிருதா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன்பின் 7ம் அறிவு, பிஸ்னஸ்மேன், இரும்பு குதிரை, டபுள் ஐ ஸ்மார்ட் படங்களில் நடித்தார்.

தற்போது எந்த படத்திலும் நடிக்காத ஜானி ட்ரை நுயன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அட டாங்லியா இது என ஷாக் ஆகியுள்ளனர். முகம் எல்லாம் ஒட்டிப்போய் ஆளே சுத்தமாக மாறிவிட்டார்.

இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,

NO COMMENTS

Exit mobile version