Home சினிமா கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிவந்த அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் போட்டோ… வெளியிட்ட பிரபலம்

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிவந்த அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் போட்டோ… வெளியிட்ட பிரபலம்

0

நடிகர் அஜித்

நடிகர் அஜித் என்பதை தாண்டி ரேஸர் அஜித் என்று தான் இப்போது கூற வேண்டும். காரணம் கடந்த பல மாதங்களாக ரேஸிங்கில் களமிறங்கி வெற்றிகள் குவித்து வருகிறார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரேஸில் அஜித் கலந்துகொண்டு சாதிப்பதை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்றே கூறலாம். இப்போது அஜித் மலேசியாவில் நடக்கும் ரேஸிங்கில் பங்குபெற்று வருகிறார்.

மலேசியா செல்லும் பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்த அவரது போட்டியை பார்த்தும் வருகிறார்கள்.

போட்டோ

போட்டிகளை முடித்த கையோடு அஜித் மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியானது, படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

இதனால் அடுத்தும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரனுடனேயே கூட்டணி அமைக்கிறார், படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருகிறது.

கார் ரேஸ் போட்டியில் பிஸியாக இருக்கும் அஜித்தின் ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சுரேஷ் சந்திரா, கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற அஜித்-ஷாலினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர அது இப்போது வைரலாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version