Home இலங்கை சமூகம் தலவாக்கலையில் அதிர்ச்சி : ஒரே வீட்டில் உயிரிழந்த பல ஆடுகள்

தலவாக்கலையில் அதிர்ச்சி : ஒரே வீட்டில் உயிரிழந்த பல ஆடுகள்

0

Courtesy: Aadhithya

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை ஹொலிரூட் ரத்னீகல தோட்டத்தில் உள்ள வீட்டில் ஒரே இரவில் 8 ஆடுகளும் ஒரு நாயும் இறந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டின் ஆட்டு தொழுவத்தில் 12 ஆடுகள் காணப்பட்ட நிலையில் காலை தொழுவத்திற்கு ஆடுகளுக்கு உணவு கொடுக்க சென்ற வேளையில் ஒரே நேரத்தில் 8 ஆடுகளும் காவலுக்கு இருந்த 1 நாயும் இறந்துள்ளமையால் வீட்டின் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருவதோடு, பரிசோதனைக்காக தலவாக்கலை கால்நடை வைத்திய காரியாலயத்துக்கு இறந்த ஆடுகள் மற்றும் நாய் ஆகியவற்றினது உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version