Home இலங்கை சமூகம் இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்த கடற்தொழிலாளர்கள்! நீதவான் பிறப்பித்த உத்தரவு

இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்த கடற்தொழிலாளர்கள்! நீதவான் பிறப்பித்த உத்தரவு

0

இலங்கை ( Sri lanka) கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்து கடற்தொழி்லில் ஈடுப்பட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது, மன்னார் (Mannar) நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை(27) விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் நேற்று திங்கட்கிழமை(26) இரவு 8 கடற்தொழிலாளர்கள் சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

நீதவான் உத்தரவு

அவர்களை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

[KFWYQC]

தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்தொழிலாளர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று (27) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version