Home இலங்கை சமூகம் வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் : வெளியான தகவல்

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் : வெளியான தகவல்

0

மடகஸ்கார் (Madagascar0 பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மொழிப் பிரச்சினை காரணமாக மடகாஸ்கரில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்னா கமகே (Ratna Gamage) தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து எட்டு கடற்றொழிலாளர்ககளுடன் புறப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல் ரூட் பாபா 06, ஜூன் 2 ஆம் திகதி கடல் எல்லைகளை மீறியதாகக் கூறி தடுத்து நிறுத்தப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கை

இந்தநிலையில், உணவு மற்றும் சுத்தமான நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் தாங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக  கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் அதிகாரிகள் தலையிட்டு தங்கள் உடனடி விடுதலையைப் பெறுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், தற்போது மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் நடந்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாக பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர் இல்லாததால், மடகாஸ்கரில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்னா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version