Home இலங்கை குற்றம் பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற தாய் – மகனின் சடலம் மீட்பு – மகளை தேடும்...

பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற தாய் – மகனின் சடலம் மீட்பு – மகளை தேடும் பொலிஸ்

0

அனுராதபுரத்தில் தாய் ஒருவர் 2 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற நிலையில் அவரது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுவையில் இருந்து அனுராதபுரத்திற்கு சென்ற தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து, நீரில் அடித்து செல்லப்பட்ட மகனின் சடலம் அனுராதபுர நகரத்தின் மிஹிந்துபுர பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.


பொலிஸ் குழு

உயிரிழந்த நிலையில் 8 வயது திஷுகா மீரியகல்ல என்ற சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மல்வத்து ஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 4 வயது சிறுமி சித்துல்யா மீரியகல்லவை தேடும் நடவடிக்கையில் பொலிஸ் குழு ஈடுபட்டுள்ளது.

5 நாட்களுக்கு முன்பு, 2 பிள்ளைகளின் தாயான ஒருவர், தனது 8 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன், மிஹிந்துபுர பாலத்திலிருந்து மல்வத்து ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version