Home இலங்கை குற்றம் 80 வயது மூதாட்டியின் மரண தண்டனை! பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை! பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

0

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மரண தண்டனை 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மோதரப்பிலுவாவில் ஒருவரைக் கொலை செய்ததாக, மேலும் இருவருடன் இணைந்து, சிறிமா எடிரிசூரியா குற்றவாளியாக 1999ஆம் ஆண்டு வழக்கில் குறிப்பிடப்பட்டார்.

இந்த வழக்கு பல ஆண்டுகள் தாமதிக்கப்பட்ட நிலையில் மறுசெய்துவிசாரணைகள் நடைபெற்றன. மேலும் மற்ற சந்தேகநபர்கள் இருவரும் வழக்கின் போது உயிரிழந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2023ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றம்

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மூதாட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அவை தெளிவற்றவையாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாததால், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version