Home இலங்கை சமூகம் வெள்ளத்தினால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு நஷ்டஈடு

வெள்ளத்தினால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு நஷ்டஈடு

0

கடந்த நவம்பர் மாதம் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு

அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்ச்செய்கை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் உணவுப் பொருட்களுக்கான சிறு பற்றாக்குறை அல்லது தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version