Home முக்கியச் செய்திகள் தொடரும் இந்திய உதவி : பாலத்தை சுமந்துகொண்டு வந்த இந்திய விமானம்

தொடரும் இந்திய உதவி : பாலத்தை சுமந்துகொண்டு வந்த இந்திய விமானம்

0

இந்திய பேரிடர் உதவிகளை ஏற்றிய 8வது விமானம் இன்று(12/04) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய அரசாங்கத்தால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படும் 10 பாலங்களில் இரண்டாவது பாலமான 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமுள்ள, இரண்டு வழி இரும்பு பெய்லி பாலத்தை விமானம் சுமந்து சென்றது.

பாலத்தை சுமந்து வந்த விமானம்

இந்தப் பாலம் உட்பட இந்திய விமானத்தால் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை இலங்கை இராணுவப் பொறியாளர் படையின் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், இந்தப் பாலம் நுவரெலியா பகுதியில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவப் பொறியாளர் படையின் அதிகாரிகளால் நிறுவப்பட உள்ளது.

மேலதிகமாக, படகுகள், சீனி மற்றும் ஜெனரேட்டர்களும் கொண்டு வரப்பட்டன.

இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமானம்

இவற்றை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமானமான C-17, 12/04 இன்று மதியம் 01.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த நிகழ்வின் போது இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவும், இலங்கை இராணுவ பொறியாளர் படை மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version