Home இலங்கை 9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

0
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று (3) அவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும், மூன்றாம் குற்றச்சாட்டுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் 9 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/9-indian-fishermen-released-with-conditions-1788493066

NO COMMENTS

Exit mobile version