Home இலங்கை சமூகம் அம்பாறையில் சிறுமி மீது அத்துமீறல்: 69 வயது நபர் கைது

அம்பாறையில் சிறுமி மீது அத்துமீறல்: 69 வயது நபர் கைது

0

அம்பாறை – வீரமுனை பகுதியில் 9 வயது சிறுமியை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உள்ளாகிய நபரெருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதிர்ஷ்டஇலாப சீட்டு விற்பனை செய்யும் 69 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து சிறுமியின் தாயார் முறைப்பாடு ஒன்றை சம்மாந்துறை பொலிஸ்
நிலையத்தில் மேற்கொண்டிருந்தார்.

அதிர்ஷ்ட இலாப சீட்டு

குறித்த முறைப்பாட்டிற்கமைய அதிர்ஷ்ட இலாப
சீட்டு விற்பனை செய்யும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர்
டிக்கெட்) விற்பனை செய்பவர் எனவும் அம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும்
முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட 9
வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version