Home இலங்கை சமூகம் தமிழர்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி : குற்றவாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழர்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி : குற்றவாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

தலைமன்னார் (Talaimannar) – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை (09-01-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற உத்தரவானது இன்றையதினம் (26.12.2024) பிரப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயதுடைய சிறுமி ஒருவரை தவறானமுறைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

விளக்கமறியல்

இந்நிலையில் குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தலைமன்னார் காவல்துறையினரால் தடுத்து வைத்து மேற்கொணட விசாரணைகளின் பின்னர் கடந்த திங்கட்கிழமை (16.12.2024) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மன்னார் நீதவான்

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் வியாழக்கிழமை (26.12.2024) மீண்டும் விசாரணைக்கு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version