Home இலங்கை சமூகம் 22 நாட்கள் நடைபயணம் : மலையக இளைஞனின் உலக சாதனை முயற்சி!

22 நாட்கள் நடைபயணம் : மலையக இளைஞனின் உலக சாதனை முயற்சி!

0

மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையிலும், உலக சாதனை படைக்கும் முகமாகவும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

காலி முகத்திடலில் (Galle Face) வைத்து தமது பயணத்தை ஆரம்பித்தவர் நேற்றைய தினம் (09.04.2025) வாழைச்சேனையை (Valaichchenai) வந்தடைந்துள்ளார். 

அவர் தமது பயணத்தை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஊடாக மீண்டும் ஆரம்பித்த இடத்தை சென்றடையவுள்ளார். 

மேலும் குறித்த இளைஞன் மூன்று கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து தமது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதில், மலையக மக்களை தோட்டக்காட்டான் என்று மட்டம் தட்டலை நிறுத்துதல், வெளிநாடுகளுக்கு செல்லும் எமது நாட்டு பெண்களுக்கு சரியான கவனிப்பு,பராமரிப்பு இல்லை,தகுந்த பாதுகாப்பு இல்லை அதனை ஜனாதிபதி தலையிட்டு அவர்கள் நலனில் அக்கறை கொள்ளச் செய்தல், தன்னைப் போன்ற சாதனையாளருக்கு சரியானதொரு அங்கீகாரம் என்பன வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமது உலக சாதனை நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/p2RpYEnYGZ0

NO COMMENTS

Exit mobile version